தலைப்பு செய்திகள்
ஆர் பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் திருமண விழா.
கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் கோவிலில் வைத்து.அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன் இல்ல திருமண விழாவில் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் கோவிலில் வைத்து.அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன் இல்ல திருமண விழாவில் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில்,
முன்னணியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து புதுமணத் தம்பதிகள் விஜயகுமார்,கார்த்திகா மணமக்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.திருமண விழாவில் நகர செயலாளர் விஜய பாண்டியன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மாவட்ட குழு தலைவி சத்யா,எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனி ராஜ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி,தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் கோபி, பழனி குமார், முருகன்,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.