BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பதவியை பதவியாக பார்க்காமல், பொறுப்பாக உணர்ந்து அனைவரும் மக்கள் சேவையாற்றுவோம் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வது வார்டுகளில். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 40 உறுப்பினர்களையும், அதிமுக 7 வார்டு உறுப்பினர்களையும், பாஜகவும், அமமுக தலா ஒரு வார்டையும், சுயேட்சை இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கும், மறைமுக தேர்தல் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் தேர்தலை புறக்கணித்தார். மீதம் 50 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் திமுக மேயர் சன்.இராமநாதன் 39 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் துணை மேயர் மணிகண்டன் 11 வாக்குககள் பெற்று தோல்வியுற்றார். இதன் மூலம் தஞ்சை மாநகராட்சியின் திமுக முதல் மேயராக சன்.ராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வெற்றி பெற்ற சன்.இராமநாதனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செங்கோல் கொடுத்து மேயராக இருக்கையில் அமர வைத்தார். பின்னர் செய்தியாளகளிடம் பேசிய அவர், மகிழ்ச்சியின தருணம் இது. மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு முதலமைச்சரின் முகத்திற்காக விழுந்த ஓட்டுகள் என்று கூறிய அவர், மக்கள் நம்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். பொது தேர்தலை விட இரண்டு மடங்கு நம்மை நம்புகிறார்கள். இன்னும் அதிகளவில் மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பதவியை பதவியாக பார்க்காமல், பொறுப்பாக உணர்ந்து அனைவரும் சேவையாற்றுவோம் என அவர் தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )