தலைப்பு செய்திகள்
ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு.
ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 9-வார்டு உறுப்பினர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும், 3 வார்டுகளை அதிமுகவினரும், 3 வார்டு உறுப்பினர் திமுகவினரும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கடந்த இரண்டு தேதி ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் தஞசை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.இதன் பிறகு இன்று ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
CATEGORIES தஞ்சாவூர்