BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் திமுக கட்சியினர் கூட்டணியின் தர்மத்தை மீறி வாக்களித்ததாக காங்கிரஸார் சிறிது நேரம் போராட்டம்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் திமுக கட்சியினர் கூட்டணியின் தர்மத்தை மீறி வாக்களித்ததாக காங்கிரஸார் சிறிது நேரம் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக கூட்டணி கட்சியின் சார்பாக காங்கிரசுக்கு திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் செல்வமேரிஅருள்ராஜ் அவர்களை எதிர்த்து திமுகவை சேர்ந்த திமுக நகர செயலாளர் மனைவி சாந்தி சதீஷ்குமார் அவர்கள் போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் வாக்களித்து காங்கிரஸ் கட்சியை தோற்கடித்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )