தலைப்பு செய்திகள்
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்று மக்களை ஏமற்றியதாக ஓபிஎஸ் பெரியகுளம் பிரசாரத்தில் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் நகர் மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 30 வார்டு வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ. பி. எஸ். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர். அவர் போசியதாவது அதிமுகவின் 10 ஆண்டுகாலம் ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்கள்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றியதாகவும் , 2021 சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை அடகு வைத்த நகைகள் அனைத்தும் தல்லுபடி செய்யப்படும் என கூறியதால் அடகு வைத்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டிய தோடு
அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசுகளுடன் 2500 ரூபாய் வழங்கியது , ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்படவில்லை. பொங்கல் பொருட்களும் பயன்படுத்த முடியாத நிலையில், பப்பாளி விதைகளை மிளகுக்கு பதில் வழங்கியதாகவும் தரமற்ற பொருட்கள் பொங்கல் பரிசாக திமுக அரசால் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலின்போது பொங்கல் பரிசுத் தொகை 5,000 ரூபாய் வழங்குவதாக கூறி திமுக அரசு வழங்காமல் மக்களை ஏமாற்றியது என ஓபிஎஸ் குற்றம் சாட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பெரியகுளம் நகராட்சியின் 30 வார்டுகளிலும் போட்டி இடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொண்டர் களுக்கான தேர்தல் தொண்டர்களை வெற்றியடையச் செய்ய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றாக கட்சியினர் பாகுபாடு இன்றி செயல்பட்டு அனைவரையும் வெற்றி பெறச் செய்யுங்கள் என ஓபிஎஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.