தலைப்பு செய்திகள்
எனது வார்டை சுத்தமானதாக மாற்றுவேன் – இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண் சிங்கம்.
தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்று திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் மேளதாளங்களுடன் சுமார் 100 ஆதரவாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் 16 வது வார்டில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் ஜாகிராபானு என்பவர் இறுதிகட்ட பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார். அவர் தனது கட்சிக்காரர்கள் யாருமின்றி தனது தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் நகர் வசந்தா நகர் விஸ்வாஸ் நகர் தோப்புத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தான் ஒருவர் மட்டுமே வீடு வீடாகவும் சிங்கம் போல் சிங்கிளாக சென்று பொதுமக்களிடம் தான் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர்
எனது வார்டில் ஏற்படும் பிரச்சினை குறித்து ஏற்கனவே இருந்த கவுன்சிலரிடம் போய் சொல்லும்போது அவர்கள் எதையும் செய்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் நான் வெற்றி பெற்றால் எனது பகுதியில் கழிவறை ஏற்படுத்துவேன், மேலும்.