தலைப்பு செய்திகள்
இறுதிக் கட்ட பிரச்சாரம் அதிமுக, திமுக, எஸ்டிபிஐ, நாம்தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு.
தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று அனைத்து கட்சியும் கட்சியின் வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் அதிமுக சார்பில் 17வது வார்டில் போட்டியிடும் அன்பழகன் தனது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர், சத்யமூர்த்தி நகர், தாரநல்லூர், கீரைகடை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் செல்லும் வழி எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.இதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 31-வது வார்டில் போட்டியிடும் அனீஸ் பாத்திமா தனது வார்டுக்கு உட்பட்ட வரகனேரி, பெரியார் நகர், பிள்ளையார் கோவில் தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
CATEGORIES திருச்சி