தலைப்பு செய்திகள்
தஞ்சையில் பிரபல சின்னத்திரை நடிகை சாய் காயத்ரி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்.
தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்,தேர்தல் பிரச்சாரம் 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி 4வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சனாதனிக்கு ஆதரவாக பிரபலமான டிவி சீரியலான ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர் ஆகிய நாடக தொடர்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சாய் காயத்ரி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்,
அப்போது டிவி தொடரை பார்க்கும் பொதுமக்கள் சின்னத்திரை நடிகையை வீட்டில் அமர வைத்து அவருடன் பேசி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் சாய் காயத்ரி கூறும் போது, தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை இளம் வேட்பாளரான சனாதினி நிறைவேற்றித் தருவார்
, சரியான நபரைத் தேர்ந்தெடுத்து இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கேட்டுக்கொண்டார், இந்த பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.