தலைப்பு செய்திகள்
அலங்காநல்லூர் பேரூராட்சி வார்டு பகுதியில் பாஜகவினர் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
பிரதம மந்திரி மக்கள் நல விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மாநில துணை தலைவர் நாராயணன், மாநில செயலாளர் வேலாயுதம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு துணை தலைவர் தினகரன், புறநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், புறநகர் மாவட்ட செயளாலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் அலங்காநல்லூர் பேரூராட்சி 9வது வார்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராணி அவர்களை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். முன்னதாக வேட்பாளர்களை ஆதரித்து கேட்டு கடை முதல் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் வரை வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஒன்றிய பொது செயலாளர் வைகை வசந்தன், நிர்வாகிகள் மெடிக்கல் சுரேஷ், கல்லணை ராஜா, மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.