BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோவையில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்த ருமேனியா நாட்டு தொழிலதிபர்!

கோவை: கோவையில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ருமேனியா நாட்டு தொழிலதிபர் ஒருவர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனையடுத்து கட்சிகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இருச்சக்கர வாகனத்தில் கழுத்தில் திமுக துண்டு, கையில் ஸ்டாலின் படத்துடன் திமுகவுக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டீஃபன் நெகொய்டா.

ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன், கோவையில் உள்ள கோகுல் கிருபா சங்கருடன் இணைந்து ஸ்வெட்டர் தொழில் செய்து வருகிறார். அண்மையில் அவர் கோவைக்கு தொழில்ரீதியாக வந்துள்ளார். அப்போது தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தொழிற்சாலைக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் பெண்களுக்கு டிக்கெட் வாங்காததைக் கண்டு ஆச்சர்யபட்டு நண்பரிடம் கேட்டுள்ளார்.

நண்பர் கோகுல் கிருபா சங்கர், திமுகவின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் பற்றி கூறியுள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பது பற்றியும் கூறியுள்ளார். உடனே திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். கிருபா சங்கரின் தொழிற்சாலையில் இருந்த பெண் தொழிலாளர்கள் இலவச பேருந்து பயணத்தால் தங்களால் சிறு தொகையை சேமிக்க முடிகிறது என்று கூறியுள்ளனர். இவற்றால் ஈர்க்கப்பட்டே தனது நண்பர் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வதாகக் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )