BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வாடகை செலுத்தாததால் சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 5 கட்டடங்கள் பூட்டி சீல்வைப்பு.

 

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலுக்கு சொந்தமான சென்னையில் உள்ள வணிகரீதியலான 5 கட்டடங்களுக்கு வாடகை செலுத்தாததால் செயல் அலுவலர் முத்துலட்சுமி தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்கள் கோயில் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், வணிக ரீதியாகவும், குடியிறுப்புகளாகவும் வாடகை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள மலையபெருமாள் கோயில் தெரு, உத்தண்டி தெரு, நாட்டு பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 5 கட்டடங்கள் 11 வாடகை தாரர்களுக்கு வணிக ரீதியாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 5 கட்டடங்களில் உள்ள 11 வாடகை தாரர்களும் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து வாடகை செலுத்தாமல் சுமார் ரூ 2 கோடிக்கு வாடகை பாக்கிவைத்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் கார்திகேயன், அறநிலையத்துறை ஸ்ரீபெரும்புதூர் சரக ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னையில் வாடகை பாக்கி நிலுவை வைத்துள்ள 5 கட்டடங்களையும் பூட்டி சீல்வைத்தனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீண்ட காலமாக வாடகை பாக்கி நிலுவையில் உள்ள வணிக ரிதியலான கட்டடங்கள் தற்போது பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடியிறுப்புகளில் வாடகை பாக்கி நிலுவையில் உள்ள கட்டடங்களும் பூட்டி வைக்கப்படும். வணிக ரீதியலான கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டதால் செவ்வாய்கிழமை வாடகை பாக்கி ரூ31.40 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )