தலைப்பு செய்திகள்
தேர்தல் வாக்குப் பெட்டியினை எடுத்துச் செல்ல தயார் நிலையில் உள்ள வாகனங்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கும்பகோணம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு வாக்குப் பெட்டியினை எடுத்துச் செல்ல தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 142 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
மேலும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட மொத்தம் நான்கு பேர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மொத்தம் 411 ஊர்க்காவல் படையினர் வாகனத்தில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES தஞ்சாவூர்