தலைப்பு செய்திகள்
குரூப்-2 – குரூப் 2 ஏ தேர்வு தேதி இன்று அறிவிப்பு.!
குரூப்-2 – குரூப் 2 ஏ தேர்வுக்கான தேதி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் டி.எஸ்.பி.எஸ் குரூப் 2 பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று லட்சக்கணக்கான இளம் தலைமுறையினர் காத்துக் கொண்டிருகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது டி.எஸ்.பி.எஸ் குரூப் 2 பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 5,831 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 – குரூப் 2 ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வெளியாகும் என்று தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.