BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் பெய்த கன மழையினால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் பெய்த கன மழையினால் சம்பா தாளடி நெல் பயிர்கள் அறுவடை நேரத்தில் சாய்ந்தது ஒரு வாரம் ஆகியும் தண்ணீர் வடியாததால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது எனவே தமிழக அரசு உடனடியாக பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது இதையடுத்து குறுவை சம்பா தாளடி என முப்போக சாகுபடி விவசாயிகள் மேற்கொண்டனர்.

குறுவை அறுவடையின் போது கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பல ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டது இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்டா மாவட்டங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தது இதை அடுத்து ஒரு ஹெக்டேர் நெல் பாதிப்பிற்கு தமிழக அரசு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு ஏக்கருக்கு வெறும் 8000 ரூபாய் மட்டுமே நிவாரணம் ஆகும் எனவே நிவாரணத்தை உயர்த்தித் தர விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர் இந்நிலையில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் பெய்த கன மழையினால் பல்வேறு இடங்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் சாய்ந்து சேதமாகி உள்ளது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் புலவன்காடு பொய்யுண்டார்கோட்டை அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது மழை பெய்து ஒரு வாரம் ஆனாலும் வயல்வெளிகளில் தண்ணீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளதால் புலவன்காடு உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கர் நெற் பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதைப்போல் பல பகுதிகளிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சம்பா தாளடி பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் உடனடியாக நிவாரணத்தை அறிவித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் குறுவை பாதிப்பிற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் இதுவரை வந்து சேராத நிலையில் சம்பா தாளடி யிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கலங்கி போய் உள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )