தாராபுரம் அரசு போக்குவரத்து ஓட்டுநர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.
தாராபுரம் அரசு போக்குவரத்து ஓட்டுநர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி உட்பட்ட 18வது வார்டில் கிறிஸ்துவ அனுப்பு தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (58) இவர் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.. இவர் இரவு நேரங்களில் குடிபோதையில் அப்பகுதியில் உள்ள சிறார் மற்றும் சிறுமிகளிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் 22.05.2022 மாலை குடிபோதையில் அங்குள்ள சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பகுதியில் செய்தி பரவலாக வெளிவந்தது, இதனையடுத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிறார்,சிறுமியரின் பெற்றோர்கள் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆரோக்கியதாஸ் குடிபோதையில் அதே பகுதியில் உள்ள சிறார், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தவை புகார் அளித்துள்ளனர், பெற்றோர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் புகாரின் அடிப்படையில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம் தலைமையில் ஆரோக்கியதாசை தேடிவந்தனர்.. மேலும் இந்தப் புகாரின் அடிப்படையில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆரோக்கியதாஸ் தேடிவந்த நிலையில் அவரை இன்று காலை அவரது உறவினர் இல்லத்தில் பதுங்கி இருந்ததை அறிந்து அவரை பொறிவைத்து அவரை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்றது விசாரணையில் அவர் சிறுவர் சிறுமியிடம் சில்மிசம் செய்ததை ஒப்புக் கொண்டதை அதனடிப்படையில் ஆரோக்கியதாஸ் தாராபுரம் குற்றவியல் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட,நீதிபதி திரு.பாபு அவரின் உத்தரவின் கீழ் அவரை கோவையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
