திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர்.
![திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர். திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/02/WhatsApp-Image-2023-02-02-at-2.08.05-PM.jpeg)
செய்தியாளர் மணிகண்டன்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் செல்வ சுந்தர விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது.
தாமிரபரணி ,காவேரி, வைகை, சிறுவாணி, புனித தீர்த்தங்கள் கும்ப கலசங்களில் சேகரிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்டு அடைக்கலம் காத்த விநாயகர் திருக்கோவில் இருந்து ராஜ மேளம் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
ஊர்வலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் சீருடை அணிந்தவாறு ஓம்கார கோஷமிட்டு வலம் வந்தனர். வீதிகளில் ஊர்வலம் வந்த புனித தீர்த்த வலத்தின் முன்னே விநாயகர் வேடமணிந்து ஆட்டம் போட்ட குட்டி விநாயகர் சிறியவர் முதல் பெரிய வரை எல்லரையும் கவர்ந்தார்.
புனித தீர்த்த ஊர்வலம் சிவன் கோவில், கண்ணபிரான் கோவில், பெரிய அம்மன் கோவில், மணலிவிளை முத்தாரம்மன் கோவில் வாகையடி இசக்கி அம்மன் கோவில், உச்சிமாகாளி அம்மன் கோவில் வழியே செல்வ சுந்தர விநாயகர் திருக்கோவில் ஆலயத்தை வந்தடைந்தது.