BREAKING NEWS

திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் வருவாய் துறை மூலம்பேரிடர் முதலுதவி மற்றும் பயிற்சி முகாம்.

திசையன்விளை அருகே   குமாரபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் வருவாய் துறை மூலம்பேரிடர் முதலுதவி மற்றும் பயிற்சி முகாம்.

திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சியில் தமிழக வருவாய்த்துறை சார்பில் பேரிடர் காலத்தில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொது மக்களை காப்பது குறித்தும், முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்தும் குமாரபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் விளக்கமும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் திடீரென ஏற்படும் தீ விபத்துக்களில் இருந்து மக்களை காப்பது எப்படி? பாம்பு கடியிலிருந்து காப்பாற்றுவது, விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு போராடுபவர்களை காப்பது எப்படி?, திடீரென ஏற்படும் வலிப்பு நோய் மற்றும் மயக்கநிலைகளில் இருந்து பொதுமக்களை காப்பது மற்றும் முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்து செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர் சபேஷ் பயிற்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் 60க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து பயோடேட்டா பெறப்பட்டது. தகுதி உள்ள தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் அடையாள அட்டையும் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பேரிடர் குறித்த முதலுதவி விளக்கக் கூட்டத்தில்
வருவாய் ஆய்வாளர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் இசக்கியப்பன், அயூப்கான் ,செல்வகுமார், சந்தனகுமார், கிராம உதவியாளர்கள் ராமர், மாரியப்பன், பெரியதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )