BREAKING NEWS

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளி 1998 ம் வருட மாணவமாணவிகள். 24 வருடத்திற்கு பின்னர் மீண்டும் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளி 1998 ம் வருட மாணவமாணவிகள். 24 வருடத்திற்கு பின்னர் மீண்டும் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1998 ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்திரு.ஆண்டனி டக்ளஸ் முன்னாள் ஆசிரியர்கள் எட்வின், சரோஜா முன்னாள் மாணவர்கள் மகராஜன்,சுபாஷினி மெர்லின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விஜயா வரவேற்று பேசினார். நிகழ்ச்சி யில் தற்போதைய தலைமை ஆசிரியை பிரீட்டா முன்னாள் ஆசிரியர்கள் எட்வின், சரோஜா, சந்தியாகு ராஜன்,சாகுல் ஹமீது, ஆரோக்கியம்,ஜாண்சன், பாலன் குரூஸ்,முருகன், பெவின் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் டெர்ரி,கிறிஸ்டியன், குமாரராஜா,வென்ஸி,சுபாஷ், நம்பித்துரை,ஜென்சி ,சுஜித்,ஜெயன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினர். மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கு இரண்டு கம்ப்யூட்டர்கள் முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது.மாணவிகள் மற்றும் குழந்தைகளின் நடனம் நடந்தது. ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் தங்களது வசந்த கால நினைவு களை பகிர்ந்து கொண்டனர். அனைவரும் மதிய உணவு விருந்துண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னாள் மாணவிகள் பெல்சிஸ் பபிதா,டெனிஷா,ஜாஸ்மின் ஆகியோர் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி யில் ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலரும் முன்னாள் மாணவியுமான பிரேமா,முத்துக்குமார், ஜெபமணி, கே.பி.சுதர்சன்,அருள் ரமேஷ், ஸ்டீபன், வினோத்,சண்முகநாதன்,மனோஜ் வளன்,ஜெபஸ்டின்,தினகரன் உட்பட நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )