BREAKING NEWS

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம்:
திசையன்விளை எலைட் ரோட்டரி கிளப் 2022-2023 ஆண்டிற்கான புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியேற்ப்பு விழா திசையன்விளை பாலசுகுமார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட கவர்னர் ஏ.கே.எஸ். வி.ஆர்.முத்து அண்ணாட்சி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். இதன் படி புதிய தலைவராக பால கிருஷ்ணன், செயலாளராக ரமேஷ்குமார், பொருளாளராக சிவகுரு ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. வயது முதியவர்கள் 8 நபர்களுக்கு கட்டில்கள் வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தையல் மிஷின்கள் வழங்கப்பட்டது. திசையன்விளையில் 5 வெவ்வெரு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

திசையன்விளை சுற்றுவட்டார அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2021-2022 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுவில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஷீல்டு மற்றும் காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திசையன்விளை எலைட் ரோட்டரி கிளப் உறுப்பினர் கள் ரோட்டரி மாவட்ட செயலாளர் குருசாமி , முன்னாள் தலைவர் சாந்தகுமார் ,முன்னாள் செயலாளர் பிரபாகர் , திசையன்விளை பேரூராட்சி தலைவர் .ஜான்சிராணி , திசையன்விளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து ரோட்டரி கிளப் ஆஃப் வள்ளியூர் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டேரியன் அனைவரும் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )