BREAKING NEWS

திட்டக்குடி அருகே காமக்கொடூரன்களால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.

திட்டக்குடி அருகே காமக்கொடூரன்களால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- திட்டக்குடி அருகே 10ஆம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவி, சிவசக்தி, மணிகண்டன், ராஜேஷ் உள்ளிட்ட நான்கு காமக் கொடூரன்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பேரதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் வன்முறை குற்றங்களுக்கான அவசரச் சட்டம் வந்த பிறகும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விடவில்லை.

கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு, உரிய சிகிச்சை அளிப்பதோடு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டு பாலியல் வன்கொடுமையில் தொடர்புள்ள நான்கு காமக் கொடூரன்களுக்கும், பிணையில் வரமுடியாத தண்டனை வழங்க வேண்டும். வாட்சப்-பில் யார் யாருக்கு வீடியோ அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அவ்வீடியோவை நீக்குவதோடு, அதனை பகிர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )