BREAKING NEWS

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது, 1.1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் – ஐஜி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது, 1.1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் – ஐஜி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐஜி தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,

 

கஞ்சா விற்பனை செய்த விஜயகுரு(30), லோகமணிகண்டன் (25), தீபக்(21), செல்வ மருதநாயகம்(25) சிவசக்தி பாண்டி(20) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )