BREAKING NEWS

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 1 பலி,2 பேர் காயம்.

திண்டுக்கல் அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 1 பலி,2 பேர் காயம்.

 

திண்டுக்கல் அருகில் உள்ள. வாழைக்காய்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (42). கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார் இவரும் அஞ்சுகுழிப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த சித்திக்(40) என்பவரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

 

 

அப்போது கவராயபட்டியை சேர்ந்த ராஜ்குமார்(22) என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்தார். திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பேரும் 3 படுகாயமடைந்தனர்.

 

அவர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அழகர்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சித்திக் மற்றும் ராஜ்குமார் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகிறார்.  இவ்விபத்து குறித்து பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )