திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய ஒற்றுமை நடைபயண விளக்க தெருமுனை கூட்டம்.

திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாரத இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்டு ரோடு ஆவின் பாலகம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு மண்டல தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் ஜெ.கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைமணிகண்டன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முகமது அலியார்,

திண்டுக்கல் மாநகர மாவட்ட மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ். ரோஜாம்மாள், மாநகர் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர். ரஞ்சித்குமார் , மூத்த நிர்வாகி ஜோதி ராமலிங்கம், மாமன்ற உறுப்பினர் பாரதி, மேற்கு மண்டல தலைவர் எ.அப்பாஸ் மந்திரி,
திண்டுக்கல் மாநகர் மாவட்ட வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் எ.ஆசிக்அலி, பிசிசி நிர்வாகிகள் சிவாஜி, குப்புசாமி, ஜாகிர் உசேன் ,அம்சவல்லி, மச்சகாளை நிர்வாகிகள் 40- வது வார்டு தலைவர் எம்.மதார்பாட்சா, காளிராஜ், ஷாஜகான், ராஜேந்திரன், மதுரைவீரன், நிக்கோலஸ், செல்வராஜ், தவசி நாகராஜ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் 16- வது வார்டு தலைவர் ஜான் பாஷா நன்றி கூறினார்.
