திமுக கட்சியின் இளைஞரணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் திருவெறும்பூர் அருகே பாலாஜி நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசியதாவது.
இன்று நடக்கும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்பு அணிகளுக்கான பயிற்சிபாசறைக் கூட்டம் மூன்றாவது கூட்டமாகும் இது அரசியல் கூட்டம் அல்ல சமுதாயத்திற்கு நன்றி செலுத்தும் கூட்டம் நமக்கு தொண்டர்கள் மற்றும் கொள்கை என இரண்டு கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும் என்றார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம் பி யுமான ராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது.
1980 ஆம் ஆண்டு திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டது என்றும் அதில் 5 பேர் கொண்ட குழுவில் தற்போது முதல் வரும் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் தந்தையும் உறுப்பினராக இருந்தவர்கள் என்றும் நாம் பெரியாரின் பிள்ளைகள், அண்ணாவின் தம்பிகள் திராவிட மாடல் என்றால் எதிர்க்கட்சிகள் பயன்படுவதாகவும் வடமாநிலத்தவர்கள் அப்படி என்றால் என்னவென்று கேட்கிறார்கள் ஆரியத்தை எதிர்ப்பது திராவிடம்.
திராவிட ஆட்சியில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் பெயர்களோடு அவர்களின் ஜாதி பெயரும் சேர்ந்து உள்ளது. 1914 பார்ப்பனர் அல்லாத சங்கமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம்.
தொழிலை வைத்து ஜாதியை பிரித்தார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சார்ந்து தான் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். தற்பொழுது பஜகவால் பழங்குடியினர் பெண்மணி என்று ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி மர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.அவர் ஜார்கண்டில் ஆளுநராக இருந்தபோதுதான் ஜேம்ஸ் என்ற பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
ஜாதியை பிரித்தது ஆங்கிலேயர் காலத்தில் தான் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏன் தனி சட்டங்கள் வகுக்கப்பட்டதாகவும் ஆனாலும் 1900ஆண்டுக்கு பிறகே முழுமையாக அவர்களுக்கு பயன் கிடைக்க தொடங்கியது.
பெண்ணை பாவம் என்று நினைப்பவன் ஆரியன். பெருமையாக நினைப்பவன் திராவிடம் பெரியார் இறுதி காலகட்டத்தில் நம்மையெல்லாம் தாசி மகன் என்று சொல்லி வைத்துள்ளார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது என்று கூறினார்.
கல்வியை பொது சொத்தாக மாற்றியது திராவிடம் எல்லோரும் சமமானவர்கள் என்று சொல்வதைவிட சமவாய்ப்பு தருவதுதான் திராவிடம். நேரு பிரதமராக இருந்த பொழுது 1957 இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதாகவும் அப்பொழுது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் கூறியதை எதிர்த்தார்கள் அப்பொழுது சட்டத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கார் பெண்கள் மறுமணம், சொத்தில் சம உரிமை, தத்தெடுத்தல் போன்ற உரிமை வழங்க வேண்டும் என்று கூறியதற்கு சட்டம் கொண்டுவர முடியாமல் போனதால் தனது பதவியைத் தூக்கி எறிந்தார்.
அதை கலைஞர் தனது ஆட்சியில் நிறைவேற்றி உள்ளார் படிப்பு அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் ஒரு இயக்கத்திற்கு தலைமையும் தத்துவமும் மிக முக்கியம் எம்ஜிஆர் வாக்குக்காக அரசியல் நடத்தியவர் அடுத்த தலைமுறை தாண்டி தத்துவத்திற்காக இருப்பவன் தான் தலைவன் என்றும் கூறினார்.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளான கோவிந்தராஜன், வன்னை அரங்கநாதன், கவிஞர் சால்மா, செந்தில், கருணாநிதி, தர்மராஜ், காயம்பு | மாரியப்பன், செல்வராஜ், லீலா வேலு, வெங்கடேஷ் குமார் ராஜ்குமார், இப்ராஹிம் 41 வது வட்ட பிரதிநிதி சுரேஷ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் வரவேற்றார். காட்டூர் பகுதி செயலாளரு திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு கவுன்சிலருமான நீலமேகம் நன்றி கூறினார்.