திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீ கண்டபுரம் கடை வீதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழா.
பொதுக்கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.ஆர்.ராஜா வரவேற்புரையாற்றினார் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் கே.மகேந்திரன் தொடக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்துகொண்டு திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
கட்சி பாகுபாடு இன்றி திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
