திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் இல்ல திருமணம் – துர்கா ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்
திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் இல்ல திருமணம் – துர்கா ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அ.தியாகராஜன் இல்ல திருமண நிகழ்ச்சி மணமக்கள் துர்க்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் அ.தியாகராஜன் சகோதரருக்கும் மருதம்பள்ளம் முன்னாள் கிளைச் செயலாளர் பால்ராஜ் அவர்களின் மகளுக்கும் திருமணம் பூம்புகாரில் நடைபெற்றது. மணமக்கள் அ. பிரகாஷ், தமிழ்விழி ஆகியோர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அவர்களை திருவெண்காட்டில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
