திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் 1.ம் ஆண்டு வருஷாபிஷே விழா, நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே ஓட்டமடம் இராமலிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க செளடாம்பிகை திருக்கோவிலில் மகா கும்பாபிஷே விழா, நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து.

திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் அம்பாள், சாமிக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷே விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் வீரபாண்டிபுரம் ஒன்றிய கவுன்சிலர் கோபி,முருகன், கோபி, உள்ளிட்டோர் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
