BREAKING NEWS

திருச்சியில் குடும்பத்தை அலறவிட்ட 6-அடி நீள பாம்பு – லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்.

திருச்சியில் குடும்பத்தை அலறவிட்ட 6-அடி நீள பாம்பு – லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்.

திருச்சி மண்ணச்சநல்லூர் நடுகள்ளர் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலம் இவரின் வீட்டில் இன்று மாலை 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென வீட்டிற்கு உள்ளே புகுந்தது. 

 

பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடினர். 

 

மேலும் இதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் பூபேஷ்க்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவலறிருந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாம்புபிடி வீரர் பூபேஷ் சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்தார். அதனை தொடர்ந்து பிடிப்பட்ட சாரைப் பாம்பை கொள்ளிடம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். 

 

மேலும் பாம்பை லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர் பூபேஷ்க்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS