திருச்சியில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது.

திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து கண்ட்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து வீரமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் கேகே நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார்(46). போஸ்ட்மேனான இவர் பொன்மலைப்பட்டி ரோடு ஸ்ரீராம் மஹால் அருகே நின்று கொண்டிருந்த போது சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அகஸ்டின் கெவின்(20) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அகஸ்டின் கெவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
