BREAKING NEWS

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 19, 26-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

 

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை திருச்சிக்கு வந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதைகளில் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் கீழ்காணும் வகையில் போக்குவரத்து மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இதில் மதுரை – சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்கள் விராலிமலையிருந்து மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

 

திண்டுக்கல் – சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்கள் மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பிலிருந்து தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

 

துறையூர்- திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் முசிறி ரவுண்டானா, முசிறி பெரியார் பாலம், குளித்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக சத்திரம் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

 

சேலம் – முசிறி – திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் முசிறி பெரியார் பாலத்தில் இருந்து, குளித்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக சத்திரம் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

 

சென்னை – திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் சிறுகனூர், தச்சங்குறிச்சி, பூவாளுர் வழியாக சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (என்.எச்.38) சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்தடைந்து திருச்சி செல்ல வேண்டும்.

 

சிதம்பரம், அரியலூர் மார்க்கத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள் பெருவளநல்லூரிலிருந்து குமுளூர், தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் சென்று சிறுகனூர் தச்சங்குறிச்சி, பூவாளுர் வழியாக சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (என்.எச்-38) சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்தடைந்து திருச்சி செல்ல வேண்டும்.

 

எனவே, பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி போக்குவரத்து மாற்றத்தினை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS