BREAKING NEWS

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் போது கார் நிற்காமல் பறந்து.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் போது கார் நிற்காமல் பறந்து.

திருச்சி நவல்பட்டு போலீசார் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யுனோவா காரை நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் பறந்து சென்றது.

 

விரட்டி சென்ற போலீசார் எம்ஐஈடி பஸ்ஸ்டாப் அருகே காரை மடக்கி பிடித்தனர். அந்த காரில்  7 பேர் இருந்துள்ளனர். மேலும் அந்த காரை சோதனையிட்ட போது காரில் 2 பட்டா கத்தி, 2 வாள், ஒரு குத்து வாள், 2 நாட்டு வெடிகுண்டு இருந்தது தொிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில் குளித்தலை மணிகண்டன்(29), சோமரசம்பேட்டை வைரவேல்(36), கருமண்டபம் தங்கவேல் ராஜேஷ்(45), அதவத்துார் குணசேகரன்(28), குளித்தலை ரவி(21), பெரகம்பி தீனதயாளன்(29), பெட்டவாய்த்தலை ராஜா(39) என்பதும் தொிய வந்தது. இதனை தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )