திருச்சி மாநகர் பகுதிகளில் இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம் – மேயர் அன்பழகன் தகவல்

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருச்சி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூவில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தனர்.

முன்னதாக உரை நிகழ்த்திய மேயர் அன்பழகன், இந்த வருடம் இறுதிக்குள் மாநகர பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு அல்லது மாநகராட்சி சொந்தங்களிடம் உள்ளதோ அப்போது எல்லாம் மரம் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இது நிகழ்வின் போது கோட்டத் தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் , நகர் நல அலுவலர் யாழினி, கிராமாலயா தொண்டு நிறுவன இயக்குனர் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
