BREAKING NEWS

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 222 பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு இலவச பட்டாவை வழங்கினார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 222 பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு இலவச பட்டாவை வழங்கினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெற்றி பெற்றால் பட்டா இல்லாத பொதுமக்களுடைய இலவச பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் பட்டா இல்லாத பொது மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி வயலூர் சாலை உள்ள தனியார் மஹாலில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்வு.


திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 222 பொதுமக்களுக்கு இலவச பட்டாவை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, மாநகராட்சி
மேயர் அன்பழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )