திருச்சி
மகாத்மா காந்தியை கொன்றவர்கள் பெயரில் விருது வழங்குவதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சித்து கைதாகி சிறையில் உள்ள இந்து மகா சபையை சேர்ந்த சாமியார் காளிச்சரண் மகாராஜ்க்கு, இந்து மகாசபை சார்பில் கோட்சே – ஆப்தே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு சட்டசபையில் விலக்கு வழங்க தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதை கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் இன்று
திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் நிர்வாகி ஜீவா, லதா, மக்கள் அதிகாரம் நிர்வாகி ராஜா, பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.