BREAKING NEWS

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் சாலையில் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் கணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்..

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் சாலையில் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாசில்தார் கணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ரதிகலா இவர் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் தாசில்தார் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சந்தனக்குமார் உடன்குடி அருகே உள்ள பிறைகுடியிருப்பில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சந்தனகுமார் குலசேகரன்பட்டினத்தில் இருந்து உடன்குடி சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த ஆம்னி பேருந்து பைக் மீது மோதி சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்து கொண்டு சென்று வலது புறம் இருந்த தரை பாலம் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.

இதில்சந்தனக்குமார் உடல் பேருந்து அடியில் சிக்கி கொண்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரப்பட்டினம் காவல் துறையினர் ஜே சி பி இயந்திரங்கள் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் கை மற்றும் உடலை சிதைந்த நிலையில் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


பேருந்து மற்றும் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உடலை சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )