BREAKING NEWS

திருச்செந்தூர் அருகேயுள்ள அம்மன்புரம் அருகில் சாலையோர டீக்கடையில் டீ குடிக்க வந்த நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் வெட்டிக்கொலை.

திருச்செந்தூர் அருகேயுள்ள அம்மன்புரம் அருகில் சாலையோர டீக்கடையில் டீ குடிக்க வந்த நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் வெட்டிக்கொலை.

திருச்செந்தூர் அருகே உள்ள இராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் (45). இவர் நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நிர்மலா தேவி என்ற மனைவி உள்ளார்.

நிர்மலா தேவி ஆறுமுகநேரி பேரூராட்சியின் 14 வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இன்று காலையில் சுமார் 8.30 மணி அளவில் டீ குடிப்பதற்காக திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் அம்மன்புரம் அருகே சாலையோர டீக்கடைக்கு பைக்கில் வந்துள்ளார்.

பைக்கை விட்டு சரவணகுமார் கீழே இறங்கியதும், அவரை மர்ம நபர்கள் வெட்ட முயன்றதும், அவர் டீக்கடை முன்பு உள்ள உபரி நீர் வாய்க்காலில் குதித்துள்ளனர். வாய்க்காலில் அவரை மடக்கிச் சென்று மாறியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )