BREAKING NEWS

திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன் வடலியில் பழிக்குபலியாக உப்பளத் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன் வடலியில் பழிக்குபலியாக உப்பளத் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன்வடலி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் (48). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவர் தலைவன் வடலி
ஆவரையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலை செய்யப்பட்ட சண்முகராஜ் உறவினர்கள் தலைவன்வடலியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் தலைவன் வடலி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற கல்லூரி மாணவன் தலை துண்டாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால் தலைவன்வடலி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சண்முகராஜ் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )