திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வரக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக உள்ளது. இதனால் கோவிலிலிருந்து புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் புறவழிச் சாலை அமைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு செய்வதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த அடிப்படையில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று பைரவர் கோவில் அருகே ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது அவருடன் தமிழக மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் உட்பட பலர் உடன் இருந்தனர். இந்த ஆய்வுக்குப் பின் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது..

தூத்துக்குடி சாலையில் இருந்து சுப்பிரமணிய சுவாமி கோவில் வள்ளி குகை வரை ஒரு புறவழி சாலையும், அய்யாவழி கோவிலிருந்து கன்னியாகுமரி சாலை வரை புறவழி சாலையும் அமைப்பதற்கு இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான முழுமையான திட்டம் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மாநில சாலையாக இருந்த கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் மூலம் வலியுறுத்தப்படும். மாநில சாலைகளை தேசிய சாலையாக மாற்றுவதற்கு மாநில அரசுகள் விரும்பி ஒப்படைப்பது இல்லை. மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை இருப்பதால் சில சாலைகளை ஒப்படைக்க உள்ளோம். அதில் திருச்செந்தூர் வள்ளியூர் சாலை உட்பட 8 சாலைகள் ஒப்படைக்க உள்ளோம். என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
