BREAKING NEWS

திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல்

திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல்

திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல் தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் மாவட்ட தலைவர் அன்னை ஜெகதீசன் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகளை டவுண் சைவவேளாளர் சங்க பிரமுகர்கள், காந்திமதிநாதன், திருவடி, மருத்துவர் பார்வதிபாக்கியம் தம்பதியர்கள் வரவேற்றனர், காலை சிற்றுண்டியுடன் அனைவரையும் திக்குமுக்காட செய்தார் அண்ணன் சுந்தரலிங்கம் அவர்கள். மற்றும் சுந்தரலிங்ம் அவர்களின் தந்தை பெரியவர் பல அறிவுரைகளை வழங்கினார்கள், கலந்துரையாடலுக்குப்பின் டவுணில் விரைவில் கிளைச்சங்கம் உருவாக்கி சைவவேளாளர் மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்யவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தச்சை முருகேசன் பிள்ளை, அன்பு சகோதரர் மீனாட்சிபுரம் அருணாச்சலம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். என்றும் சமுதாயப்பணியில் உங்கள் வீரவநல்லூர் ப. மாரியப்பன் பிள்ளை, மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம், திருநெல்வேலி மாவட்டம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )