திருநெல்வேலி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் நகராட்சி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் என போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழாவானது நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தலைமையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் ஆணையாளர் முன்னிலையில் மேற்கண்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கம்,பட்டயம், பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்று மற்றும் மஞ்சப்பை ஆகியவை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியினை சுகாதார ஆய்வாளர் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இறுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தெருக்களில் குப்பை பிரித்து வாங்கும் போது ஏற்படும் சவால்கள் குறித்து சிறு நாடகமாக நடித்து விளக்கிக் கூறினர் இந்நிகழ்வில் கிராம உதயம்தொண்டு நிறுவனம், அன்னை டிரஸ்ட், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மையான திட்ட பணியாளர்களும் உடனிருந்தனர்
