திருநெல்வேலி மாவட்டம் காணாமல் போன கால்வாய் கண்டுபிடித்து தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் திருப்பணிகரிசல்குளத்தில் காணாமல் போன கால்வாய்யை கண்டுபிடித்து தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்கள்.
அமிர்த்சரோவர் மற்றும் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் 75 குளங்கள் புனரமைப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்குளங்களில் புனரமைப்பு பணிகள் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பணிகரிசல்குளத்திலிருந்து வெளி செல்லும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.
திருப்பணிகரிசல்குளம் சுமார் 94.2 ச.கி.மீ பரப்பளவில் உள்ள நிலங்களில் பொழியும் மழைநீர் மூலமாக நீரினை பெறக்கூடியதாக உள்ளது. மேலும் இக்குளத்திற்கு சிறுக்கன்குறிச்சி மற்றும் வடுகம்பட்டி கால்வாய்கள் மூலமாகவும் தண்ணீர் வருகின்றது. இக்குளத்திலிருந்து 168 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது திருப்பணிகரிசல்குளத்திற்கு அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. இக்குளத்திலிருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் திருநெல்வேலி டவுண் மாநகர குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனை தவிர்க்கும் பொருட்டு இக்குளத்திலிருந்து நேரடியாக வெளியேறும் உபரி நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி திருப்பணிக்கரிசல்குளத்திலிருந்து நெடுங்குளத்திற்கு செல்லும் கால்வாய் மற்றும் இக்குளத்திலிருந்து பம்பன்குளம் செல்லும் கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களையும் ஆழப்படுத்தி புனரமைக்கப்படவுள்ளது. மண் மற்றும் முற்புதர்களால் தூர்ந்துபோய் இருக்கும் இவ்வாய்க்கால்களை புனரமைப்பதால் திருப்பணிகரிசல்குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீரை மாநகராட்சி பகுதிக்குள் வராமல் நெடுங்குளம், பன்னைகுளம், மேகமுடையார்குளம், பம்பன்குளம், மஞ்சநெத்திகுளம் ஆகியவற்றிற்கு கொண்டு செல்ல இயலும், இதன் மூலம் திருநெல்வேலி டவுண் குடியிருப்பு பகுதிக்கான வெள்ள அபாயமும் தவிர்க்கப்படும்.
மாநகராட்சியில் பயன்பாட்டில் இல்லாத நீர்நிலைகளை கண்டறிந்து அதற்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிப்பது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் உபரிநீரை முறையான தண்ணீர் வழிதடங்களில் விடுவதுதான் இந்த நெல்லை நீர்வளத்தின் நோக்கமான செயல்பாடாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, மனோண்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குள் இரண்டு குளங்கள் உள்ளன. இக்குளங்கள் இங்குள்ள மான்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இவ்விரண்டு குளங்களும் பல்கலைகழகத்தின் பசுமை அமைப்பு, நெல்லை நீர்வளம் மற்றும் EFI மூலமாக புனரமைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்று.
இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், மனோன் மணியன் சுந்தரனார் பல்கலைகழக பதிவாளர் முனைவர் அண்ணாத்துரை, ஊாட்சிமன்றத் தலைவர் புஷ்பா, வட்டாட்சியர் (பேரிடர் மேலான்மை)செல்வம், திருநெல்வேலி வட்டாட்சியர் செல்ல சுப்பிரமணியன், பசுமை இயக்க பொறுப்பாளர்கள் திருமகள், அருண் கிருஷ்ணமூர்த்தி பலவேசம், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
