திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு.. கடத்திய நபருக்கு வலைவீச்சு.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் சேவல்விளை ப 6வது தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது( 36 )புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி நாகூர் மீரா மற்றும் மற்றொரு ஆண் குழந்தையுடன் நேற்று முன் தினம் திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பள்ளி வாசல் வளாகத்தில் அங்கே படுத்து உறங்கி உள்ளனர்.

நேற்று அதிகாலையில் எழுந்து சுமார் 5 மணி அளவில் எழுந்து பார்க்கும் போது அருகில் படுத்திருந்த இரண்டு வயது குழந்தை நஜிலா பாத்திமா குழந்தையுடன் படுத்து உறங்கி உள்ளனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பார்க்கும்போது குழந்தை காணவில்லை உடனே சாகுல் ஹமீது கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தனர்.

ஆய்வின் நபர் ஒருவர் காரில் குழந்தை கடத்தி செல்வது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து காரின் நம்பரை போலீசார் ஆய்வு செய்தபோது அது போலியான நம்பர் என தெரிய வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் ஒரு தனி படையும் எஸ்.ஐ வினுக்குமார் தலைமையில் காவலர்கள் செல்வ தினேஷ் ராபின்சன் பிரம்மநாயகம் கார்த்திக் முத்துராம் ஒரு தனிப்படையும் அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் கடத்தப்பட்ட குழந்தையை திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள கரம்பிவிளை விளக்கு அருகே குழந்தையை விட்டு விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை மீட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர் .இது குறித்த தகவல் தெரிந்ததும் கூடங்குளம் போலீசார் திருச்செந்தூர் அனைத்து மக்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். மேலும் குழந்தையினுடைய தாய் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து குழந்தையுடைய தாய் நாகூர்மீரா, தந்தை சாகுல் ஹமீது ஆகியோர் திருச்செந்த நடத்தும் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இரண்டு வயது குழந்தையை ஒப்படைக்கப்பட்டது. கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
