BREAKING NEWS

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் செல்வமகள் திட்டம் தலைமை அரசு கொறடா கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் செல்வமகள் திட்டம் தலைமை அரசு கொறடா கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.

 

உலக சிக்கன நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணக்க சிக்கன வாழ்க்கை மேற்கொள்ள வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ்,

 

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒன்று முதல் பத்து வயது குட்பட்ட திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சனூர், கோட்டூர், மணக்குடி, துகிலி திருக்கோடிகாவல் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகள் உள்ள ஒன்று முதல் பத்து வயது உள்ள பெண் குழந்தைகளுக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் தனது சொந்த நிதியில் முதல் தவணையை செலுத்தி செல்வமகள் திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்கி வைத்தார்.

 

 இதுகுறித்து தமிழக அரசு தலைமை கொறடாவும் கோவி. செழியன் பேசியதாவது;-

 

 

சிக்கன வாழ்க்கை வாழ்வதற்கு உலக சிக்கன நாளையொட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குங்கள் என்ற வேண்டுகோளுக்கிணங்க,

 

முதன்முறையாக திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட 1 முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க படுகிறது இதன் மூலம் சேமிப்பு பழக்கம் சிறுவயதிலேயே உருவாகும்.

 

குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளில் மேற்படிப்பிற்கு உதவியாக இருக்கும் என்பதை குறிக்கோளாக கண்டு முதன்முறையாக திருடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐந்து ஊராட்சிகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எனது சொந்த நிதியை முதல் தவணையாக ரூ500ஐ செலுத்தி துவங்கி வைக்கிறேன் என பேசினார்.

 

 

மேலும்இதன் தொடர்ச்சியாக வருகிற நவம்பர் 14-ஆம் தேதி நாச்சியார் கோயில் பகுதிக்கு சுற்றியுள்ள ஐந்து ஊராட்சிகளிலும் நிகழ்ச்சி தொடரும் என தெரிவித்தார்.

 

 நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கோ க அண்ணாதுரை அஞ்சலக கண்காணிப்பாளர் கும்பசாமி, துணைச் செயலாளர் குமார் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமதி குமார், மோகன், ரேவதி பாண்டியன் செல்வராஜ், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம்,

 

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பாலகுரு, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராசு நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )