திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய திமுக கூட்டத்தில் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம். கொறடா கோவில் செழியன் பேச்சு.

தஞ்சாவூர் மாவட்டம்,
திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் மத்திய ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம்,
அரசு தலைமை கொறடா கோவி செழியன் ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் கோ.க அண்ணாதுரை, முன்னால் எம்.எல்.ஏ கல்யாணம் ஒன்றிய செயலாளர்கள் உதயசந்திரன், மிசா மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு பேசுகையில்;-
அனைத்துத் துறை வளர்ச்சி என்ற நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக் குறியீடுகளைக் கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய எண்ணம் என்றும்,
கிராமப்புறப் பிரச்சினைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளராக உதயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் அறிவித்த கழக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டம் நன்றி தெரிவிப்பது, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுத்து அறிவித்த கழக தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறது, வாக்குச்சாவடி முகவர், பூத்து கமிட்டியில் ஊராட்சி தோறும் நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நசீர் அகமது, பேரூராட்சி செயலாளர்கள் கோசி. இளங்கோவன், சப்பானி, மற்றும் மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.