திருப்பூர் மடத்துக்குளம் பொதுமக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு மற்றும் உபகரணங்கள் பொதுமக்களுக்கு இதுவரை எரிவாயு இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று கடத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கமலவேணி கலையரசு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொறுப்புக் குழு உறுப்பினரும் கடத்தூர் ஊராட்சிக் கழகச் செயலாளருமான
கு கலையரசு ஊராட்சி மன்ற துணை தலைவர் அப்துல் பாரூக் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடுமலை துரை கேஸ் ஏஜென்சி நிறுவன அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கினர்.
CATEGORIES திருப்பூர்
