திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவியில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவியில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ,ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் மாணவர்களை வரவேற்று, விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கி இந்த வாரம் முழுவதும் நீதி போதனை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

5ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதல் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி மாணவர்கள் எந்த பள்ளியில் சேர உள்ளனர் என்ற தகவலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது…
CATEGORIES திருப்பூர்
