BREAKING NEWS

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அறிவிப்பு..

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அறிவிப்பு..

புரட்டாசி மாத புவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்தநிலையில், பக்தர்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )