திருவள்ளூர் மாவட்டம் புற்றுநோயை தடுக்கும் விலை உயர்ந்த தடுப்பூசியை 150 பெண்களுக்கு இலவசமாக செலுத்தியது ஓராசிரியர் பள்ளிகள்.

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் இயங்கும் ஓராசிரியர் பள்ளிகள் வளாகத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விலை உயர்ந்த தடுப்பூசியை 150 பெண்களுக்கு இலவசமாக செலுத்தியது ஓராசிரியர் பள்ளிகள்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை அளித்து வருகிறது ஓராசிரியர் பள்ளிகள், அதுமட்டுமின்றி அக்கிராமத்தில் உள்ள குளங்களை தூர்வாரி கொடுப்பது, பிரதமரின் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு இலவச கழிப்பறையுடன் கூடிய குளியலறை கட்டி கொடுப்பது, பல்வேறு திறன் மேம்பாட்டிற்கு இலவச பயிற்சிகள் வழங்குவது என்று ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் கெளரவச் செயலாளர் திரு.கிருஷ்ணமாச்சாரி, தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி துனண தலைவர் திருமதி அகிலா சீனிவாசன் ஆகியோர் மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
அவ்வகையில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் நோக்கத்தில் விலை உயர்ந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்துகின்றுது ஓராசிரியர் பள்ளிகள். இவ் மருத்துவ முகாமில் 150 பெண்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டது, இதன் மொத்த மதிப்பு 10லட்சம் ரூபாய் என்று ஓராசிரியர் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன் இரண்டு முறை இவ்மருத்தவ முகாமானது நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் பெத்தம்மாள், ஜனாரத்தினகனி, கனிமொழி மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மங்கை எனும் மந்திர தீபம் என்ற புத்தகத்தை ஓராசிரியர் பள்ளிகளின் கெளரவச் செயலாளர் திரு.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் வழங்க அதனை மருத்துவர் ஜனாரத்தினகனி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராஜம்மாள், சுவாமி விவேகானந்தா திறன் மேம்பாட்டு ஆலோசகர் டாக்டர் வரதராஜன், ஓராசிரியர் பள்ளிகளின் தலைமை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணன், திட்ட ஒருங்கினைப்பாளர் ராஜ்குமார் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணன், செந்தில், விஜயராகவன், களமேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.