திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வன்னியர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்னியர்களுக்கான 10.5% சதவீதம் இட ஒதுக்கீட்டனை உடனே அமல்படுத்த கோரி வன்னியர் மக்கள் கட்சி சார்பாக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன இர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சக்திபடையாட்சி தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகேஷ் முன்னிலை வகித்தார். மேலும் அர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் செஞ்சி ராஜா கவுண்டர், மாநில பொருலாளர் கோவிந்தராஜ் நாயகர்,
மாநில சட்ட ஆலோசகர் எல் ஆனந்தன் மத்திய மாவட்ட தலைவர் கண்ண்ன், மேற்கு மாவட்டத்தலைவர் சம்பத் மற்றும் மாநில மாவட்டநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருவள்ளுவர் மாவட்டம்திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிவன்னியர் மக்கள் கட்சிவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு