திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி ஊராட்சியில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி ஊராட்சியில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவெறும்பூர் பிப் 26
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சி நூலக கட்டிடத்தில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்.டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி இலவச பொது மருத்துவ முகாம் பனையக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது. திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல் ரத்த அழுத்தம் எடை உயரம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது மேலும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் ஸ்டீபன், ஜெயபிரகாஷ், தியாகு மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.